திருப்பூரில் அனுமதியின்றி பேனர் வைத்த தமாகா நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு
திருப்பூரில் அனுமதியின்றி பேனர் வைத்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பூரில், அனுமதியின்றி பேனர் வைத்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருப்பூருக்கு நேற்று முன்தினம் வருகை தந்த, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை வரவேற்கும் விதமாக போலீசாரின் அனுமதியில்லாமல் கட்சி நிர்வாகிகள் பல்லடம் சாலையில் பேனர்கள் வைத்துள்ளனர். இதையடுத்து அனுமதியில்லாமல் பேனர் வைத்ததாக தமாக நிர்வாகிகள் மீது திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story