ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு என்பது ஊழலுக்கு ஆதரவு - பாஜக தேசியச் செய்தி தொடர்பாளர் அஸ்வின் குமார்

மத்திய அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வைகோ ஆகியோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக பாஜக தேசியச் செய்தி தொடர்பாளர் அஸ்வின் குமார் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு என்பது ஊழலுக்கு ஆதரவு - பாஜக தேசியச் செய்தி தொடர்பாளர் அஸ்வின் குமார்
x
மத்திய அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ ஆகியோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக, பாஜக தேசியச் செய்தி தொடர்பாளர் அஸ்வின் குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் சம உரிமையும், முத்தலாக் சட்டத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு சட்ட பாதுகாப்பும் கிடைத்துள்ளது என்றார். மத்திய அரசு, அனைத்து மாநில மக்களுக்கும் நலத்திட்டங்களை வழங்கி வருவதாகவும், ஆனால், ஸ்டாலின், வைகோ போன்ற தலைவர்கள், எதிர்ப்பதாகவும் அஸ்வின் கூறினார். ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு, ஸ்டாலின், வைகோ போன்ற தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம், ஊழல் செய்வோருக்கு ஆதரவாக இருப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்