"வடகிழக்கு பருவ மழை - எதிர்கொள்ள மாநகராட்சி தயார்" : சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

பருவ மழை காலங்களில் ஏற்படக்கூடிய மழை நீர் பிரச்சினைகளை சமாளிக்க சென்னை மாநகராட்சி தயாராக இருப்பதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை - எதிர்கொள்ள மாநகராட்சி தயார் : சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
x
வட கிழக்கு பருவ மழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி அலுலவகத்தில் ஆணையர் பிரகாஷ் தலைமையில், நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மண்டல வாரியாக உள்ள பிரச்சனைகள் குறித்து பட்டியலிட்டு, துறை ரீதியாக விவாதித்து அதற்குரிய நடவடிக்கை எடுக்க அறிவுருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  வெள்ள தடுப்பு பணிகளுக்காக உலக வங்கி மூலமாக பெற்ற 2 ஆயிரம் கோடி நிதியைக் கொண்டு கூவம்,  அடையார்  கரை ஓரங்களில் பூமிக்கடியில் நீர் சீராக செல்வதை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், திறந்த வெளி மழை நீர் சேகரிப்பு திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்