'மதராசப்பட்டினம் விருந்து' - கலாச்சார உணவு திருவிழா : முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்

'மதராசப்பட்டினம் விருந்து' என்ற பெயரில் பழங்கால உணவுகளை மீட்கும், 3 நாள் உணவு திருவிழாவை முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்.
மதராசப்பட்டினம் விருந்து - கலாச்சார உணவு திருவிழா : முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்
x
சென்னை தீவுத் திடலில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இந்த கலாசார விழாவை ஏற்பாடு செய்துள்ளது. 200க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் பழங்கால, பாரம்பரிய, கலாச்சார உணவுகளை காட்சிப்படுத்தும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை ஒட்டி, அங்கு அமைச்சர்கள், விஜயபாஸ்கர் மற்றும் சரோஜா ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிலையில், இன்று இந்த விருந்து கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைக்கிறார். விழாவில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், தலைமை வகிக்கிறார். இன்று முதல் 15ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு விழா நடைபெறுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்