5,000 ஏரிகளை புனரமைக்க முடிவு, திட்டமதிப்பை தயார் செய்ய உத்தரவு - பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை ஆணை

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் ஏரிகளை புனரமைப்பதற்கான திட்டமதிப்பை தயார் செய்ய மாவட்ட தலைமை பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
5,000 ஏரிகளை புனரமைக்க முடிவு, திட்டமதிப்பை தயார் செய்ய உத்தரவு - பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை ஆணை
x
தமிழக அரசின் குடிமராமத்து திட்டம் மக்கள், விவசாயிகள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்றது. இதையடுத்து, இந்த திட்டத்தை மேம்படுத்தும் வகையில், அடுத்து 5 ஆயிரம் ஏரிகளை தூர்வார தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொதுப்பணி நீர்வள தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.  5 ஆண்டுகளாக தூர் வாரப்படாத ஏரிகளை கண்டறிந்து திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தியுள்ளார். அறிக்கை கிடைத்ததும் முன்னுரிமை அடிப்படையில் ஏரிகள் தூர்வாரப்படும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். உத்தரவை தொடர்ந்து, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் அனைத்து தலைமை பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்