களைகட்டும் சீட்டாட்டம் : கவலையில் மக்கள் - பள்ளி சிறுமிகள் மூலம் பாலியல் தொழில் நடப்பதாக அதிர்ச்சி
திருப்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்கும் வீடியோ வெளியாகி உள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் திருமுருகன் பூண்டி, அனுப்பர் பாளையம், 15 வேலம்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில், பாழடைந்த வீட்டின் முன்புறம் ஒருவர் வழிகாட்டுவதும், உள்ளே செல்லும் போது, பெரிய அளவில் கிளப் நடப்பதும் அதிர வைத்துள்ளது. இதுபோல, தாராபுரம், காங்கேயம், கூத்தம் பாளையம், பண்டியன் நகர், அண்ணாநகர், முத்தனம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் லாட்டரி விற்பனை மற்றும் சீட்டாட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளதாலும், சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தப்பதாக வந்துள்ள புகார்களாலும் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story