தாமிரபரணி நதியை தூர்வாரும் பணி துவக்கம்
தாமிரபரணி நதியை தூர்வாரி, தூய்மைப் படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தாமிரபரணி நதியை தூர்வாரி, தூய்மைப் படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 60 கிலோ மீட்டர் நீளத்துக்கு நடைபெறும் இந்த தூர்வாரும் பணிக்கான, 'மிஷன் கிளீன்' திட்டத்தை குத்து விளக்கேற்றி துவங்கி வைத்த அவர், ஜே.சி.பி. எந்திரத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்தப் பணியில் சமூக ஆர்வலர்களும் களமிறங்கியுள்ளனர். ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர், மூன்று நாட்களுக்கு இந்தப் பணி நடைபெறும் என்றும், பகுதிவாரியாக அதிகாரிகள் பார்வையிடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
Next Story