ரூ.30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை மீட்பு - ஆஸ்திரேலியாவில் இருந்து பொன்.மாணிக்கவேல் குழு மீட்பு
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகர முடையார், அறம் வளர்த்த நாயகி கோவிலில் இருந்து, 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டு மாயமான இந்த ஐம்பொன் நடராஜர் சிலை, தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் ஒன்றில் காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினரின் நடவடிக்கை காரணமாக, 700 ஆண்டுகள் பழமையான சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக நடராஜர் சிலை மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. விரைவு ரெயில் மூலம் சென்னைக்கு 13ம் தேதியன்று வரும் நடராஜர் சிலை, உரிய சட்ட நடவடிக்கைக்குப்பின், கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளது.
Next Story