கலை கல்லூரி சேர்க்கைக்கு கலந்தாய்வு : தமிழக அரசின் உயர்க்கல்வித்துறை முடிவு

கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் கலந்தாய்வு மூலம் மாணவர்களை சேர்க்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கலை கல்லூரி சேர்க்கைக்கு கலந்தாய்வு : தமிழக அரசின் உயர்க்கல்வித்துறை முடிவு
x
தமிழகத்தின் பல இடங்களில் இயங்கி வரும் கலை அறிவியல் கல்லூரிகளில், ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது இல்லை. இதனால் ஒரு சில கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது போன்ற புகார்களுக்கு முடிவு கட்டும் வகையில், மருத்துவம், பொறியியல் படிப்புகளை போல் கலை அறிவியல் கல்லூரிகளிலும் கலந்தாய்வு மூலம்  மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இது குறித்து முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்