20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில், 20 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில், ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 20 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில், ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை,சிவகங்கை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி ஆகிய 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை, மழை பெய்யும். புதுச்சேரி நகரின் சில பகுதிகளிலும் காரைக்காலிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story