கோவையில் வாடகைக்கு கொடுக்கப்பட்ட கார் பரமக்குடியில் மீட்கப்பட்டது : கார் கடத்தல் - போலீசார் விசாரணை

கோவையில் வாடகைக்கு கொடுக்கப்பட்ட கார் கடத்தப்பட்ட நிலையில், பரமக்குடியில் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் வாடகைக்கு கொடுக்கப்பட்ட கார் பரமக்குடியில் மீட்கப்பட்டது : கார் கடத்தல் - போலீசார் விசாரணை
x
கோவை குனியமுத்தூரை சேர்ந்த அருண் சங்கர் என்பவர் தன்னிடம் இருந்த காரை, பாட்ஷா என்ற நண்பர் ஒருவருக்கு மாத வாடகைக்கு கொடுத்துள்ளார். கடந்த ஜூலை 27ஆம் தேதி அருண் சங்கர் காரை வாடகைக்கு கொடுத்த நிலையில், பாட்ஷா ஒரு மாதத்திற்கு மட்டுமே வாடகை கொடுத்துள்ளார். கடந்த மாதத்திற்கு வாடகை கொடுக்காமல், அதே நேரம் காரையும் திருப்பி அளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் அருண் சங்கர் ஜிபிஎஸ் கருவி மூலம் காரை தொடர்ந்து கண்காணித்த போது சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை காண்பித்து உள்ளது. இதையடுத்து அருண் சங்கர், நண்பர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரது நண்பர்கள் ஜிபிஎஸ் கருதி உதவியுடன் காரை பின் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு பரமக்குடி அருகே காரை ஓரமாக நிறுத்தி, பூட்டிவிட்டு காரை கடத்தியவர்கள் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலை அடுத்து போலீசார் வந்து சோதனையிட்டுள்ளனர். அப்போது அருண் சங்கரின் நண்பர்கள் கார் தங்களுடையது எனக்கூறி, நடந்த விபரத்தை கூறியுள்ளனர். இதையடுத்து காரில் இருந்து 2 பாஸ்போர்ட்டுகள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பாஸ்போர்ட்டில் அப்துல் காசிம், நைனார் சித்திக் ஆகிய நபர்களின் பெயர்கள் இருந்துள்ளது. விசாரணையில் போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்தல், இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தல் என பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது இருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, காரை கடத்திய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்