ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கவில்லை - ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் செயல் அதிகாரி தகவல்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வகுப்பறைகள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் ப்ரொஜக்டர்கள்,ஸ்மார்ட் போர்டுகள் உள்ளிட்ட அதி நவீன கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வகுப்பறைகள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் ப்ரொஜக்டர்கள்,ஸ்மார்ட் போர்டுகள் உள்ளிட்ட அதி நவீன கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 9 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள இந்த வகுப்பறைகளை, மாணவர்கள் பயன்பாட்டுக்கு துவக்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒஎன்ஜிசி நிறுவனத்தின் செயல்அதிகாரி ஷியாம்மோகன், தமிழகத்தில் ஷெல் மற்றும் மீத்தேன் வாயுக்கள் எடுக்க கூடாது என்று மத்திய பெட்ரோல் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியும் ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தகவல் தெரிவித்தார்.
Next Story