"முட்டை உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிப்பு" : கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு கடும் நெருக்கடி

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி செலவு அதிகரிப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் கோழி பண்ணை உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்.
x
நாட்டிலேயே  முட்டை  உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நாமக்கல் 
மாவட்டம் ஆகும். அங்கு நாள்தோறும் 4 கோடிக்கும் அதிகமான முட்டைகள்  உற்ப்பத்தி செய்யபடுகின்றன. கோழி தீவன விலை உயர்வு, முட்டை  உற்பத்தி பலமடங்கு செலவு அதிகரிப்பு , ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல காரணங்களால் , மாதம் தோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் ஏராளமான கோழி பண்ணைகள் மூடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

கோழிகள் நோய்களால் உயிரிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல காரணங்களால் முட்டை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உற்பத்தி செலவை விட குறைவாக முட்டை விற்கப்படுவதால் பெரும் நஷ்டத்தை தினந்தோறும் சந்தித்து வருவதாக தெரிவித்துள்ள 
கோழிப்பண்ணை உரிமையாளர்கள், தங்களை காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும் இழப்பை சந்தித்து வரும் தங்களுக்கு அரசு மானியம் வழங்கி உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்