கொத்தடிமையாக வேலை பார்த்த வடமாநில சிறுவர்கள் 4 பேர் மீட்பு

சென்னையில் கொத்தடிமையாக வேலை பார்த்த வட மாநில சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை அதிகாரிகள் மீட்டனர்.
கொத்தடிமையாக வேலை பார்த்த வடமாநில சிறுவர்கள் 4 பேர் மீட்பு
x
சென்னை அயனாவரம் பகுதியில் அஜித் குமார் என்பவர் பானி பூரி தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவர் தனது சொந்த மாநிலமான பீகாரிலிருந்து  6 சிறுவர்கள் உள்ளிட்ட  7 பேரை சென்னை அழைத்து வந்து கொத்தடிமையாக வேலை வாங்கி,  சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து 3 சிறுவர்கள் தப்பி பீகார் சென்று தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சென்னை செனாய் நகரில் உள்ள குழந்தைகள் நல  வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்துறை அதிகாரிகள்  மற்றும்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 3 வடமாநில சிறுவர்கள் உள்ளிட்ட  4 பேரை மீட்டனர். பானிபூரி  விற்பனையாளர் அஜீத்குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்