அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக புகார் : நூதன போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்

மதுரை போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் குழந்தைகளுடன் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக புகார் : நூதன போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்
x
மதுரை போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் குழந்தைகளுடன் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் பொன்மேனி கிளையில் ஒட்டுனராக பணியாற்றி வருபவர் அழகர்சாமி. இவருக்கு கடந்த சில நாட்களாக பணி ஒதுக்கீடு செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் பணிக்கு வந்த நாட்களிலும் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைத்த அவர், பணிமனை முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். தன் குழந்தைகளுடன் வந்து அவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அழகர்சாமியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்