ஊரகப் பகுதிகளில் 300 கி.மீ தொலைவிற்கு கான்கிரீட் சாலை : ரூ. 95 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை
ஊரகப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு தெருக்கள் மற்றும் பாதைகளை கண்டறிந்து 300 கி.மீ தூரத்திற்கு தரமான கான்கிரீட் சாலைகள் சுமார் 95 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார்.
ஊரகப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு தெருக்கள் மற்றும் பாதைகளை கண்டறிந்து 300 கி.மீ தூரத்திற்கு தரமான கான்கிரீட் சாலைகள் சுமார் 95 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார். அதன்படி மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் இணைப்பு இல்லாத கிராமங்களை இணைக்கும் வகையில் கழிவு நீர் செல்லும் வடிகால்கள் மற்றும் பாலங்கள் வசதியுடன் கூடிய தரமான கான்கீரிட் சாலைகள் அமைக்கப்பட உள்ளன, இந்த பணிகளுக்கு நிதிஒதுக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் மழைக் காலங்களில் பாதுகாப்புடன் வாழவும், விவசாயிகள் தங்கள் பயிர்களை கான்கிரீட் சாலைகளில் உலர வைக்கவும் இந்த சாலைகளை பயன்படுத்த முடியும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனடியாக தொடங்கவும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தரவிட்டு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story