கொசு உற்பத்தி கூடமாக மாறிய தரைப்பாலம் - பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
சேலத்தில் மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ரயில்வே தரை பாலம் பயன்பாட்டு வராததால் நகர் பகுதிக்கு செல்ல 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம், போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், நகர் பகுதிக்கு வருவதற்கு ஒரே ஒரு இருசக்கர வாகனமே செல்லும் வகையில் உள்ள ரயல்வே தரை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
காலை நேரத்தில் அப்பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் பலரும் நகருக்கு செல்ல 7 கிலோமீட்டர் தூரம் சுற்றியே சென்று வருகின்றனர்.
இந்தநிலையில், 2017ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சி சார்பில் 3 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய தரைப்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயன்பாட்டு வராத தரை பாலத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால், கொசு உற்பத்தியாகி வருவதுடன், தூர்நாற்றமும் வீசுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story