தமிழிசையிடம் நியமன ஆணை ஒப்படைப்பு
தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனை அம் மாநில அதிகாரி வேதாந்தகிரி சந்தித்து நியமன ஆணையை வழங்கினார்.
தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனை, அம் மாநில அதிகாரி வேதாந்தகிரி சந்தித்து, நியமன ஆணையை வழங்கினார். இந்த ஆணையை பெற்று கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் , பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவித்தார்.
தெலங்கானா ஆளுநராக பதவி ஏற்கிறார் தமிழிசை :
வருகிற 8 ம் தேதி,. நண்பகல் 11 மணிக்கு, தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார். அவருக்கு அம்மாநில தலைமை நீதிபதி, பதவி பிரமாணம் செய்து வைப்பார். தமிழிசை சவுந்திரராஜன் பதவியேற்பு விழா, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story