அண்ணா பல்கலையில் 300 இடங்கள் நிரப்பப்படவில்லை
அண்ணா பல்கலையில் காலியாக உள்ள 300 இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு இல்லை என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். அப்படி விண்ணப்பிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் பட்சத்தில் பொறியியல் இடத்தை விடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்துவிடுவர். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் 300 இடங்களுக்கு மேல் காலியாக உள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட வேண்டும் என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விகுழு விதிமுறை என்பதால், இனிமேல் கலந்தாய்வு நடத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Next Story