விநாயகரை வணங்கிய கும்கி யானைகள்...
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முகாமில் உள்ள 24 கும்கி யானைகள் கோயிலை சுற்றி மணி அடித்து வந்து மண்டியிட்டு தோப்புக்காரணம் போட்டு விநாயகரை வழிபட்டது. பின்னர் யானைகளுக்கு சிறப்பு உணவாக பொங்கல், ராகி, பழங்கள், தேங்காய், கரும்பு வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்தனர்.
Next Story