வழிப்பறி செய்த பொருள்களை பங்கு பிரிப்பதில் தகராறு -கூட்டாளியை கொலை செய்ய சென்ற கொள்ளையர்கள்
வழிப்பறி செய்த பொருள்களை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளியை கொலை செய்ய சென்றவர்கள் அவர் வீட்டில் இல்லாததால் நாயை வெட்டி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை போரூர் கணபதி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் செல்போன் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கூட்டாளிகள் 4 பேரும் கொள்ளையடித்த பொருளை பங்கு போடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கட், முத்து அருண் ஆகியோர் கொலை செய்யும் திட்டத்துடன் கூட்டாளியின் இல்லத்துக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்குள்ள நாய் குரைத்து கொண்டே இருந்ததால் அதனை வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் வெங்கட் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story