விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - விநாயகர் சிலைகள் கரைப்பு

சென்னை காசிமேடு கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏராளமானோர் திரண்டனர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - விநாயகர் சிலைகள் கரைப்பு
x
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஏராளமானோர் காசிமேடு மீன் பிடி துறைமுகம் அருகே நேற்று திரண்டனர். பின்னர்  விநாயகர் சிலைகளை கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டி ஆரவாரத்துடன் கரைப்பதற்காக கடலில் விட்டனர். விநாயகர் சிலைகளை கரைப்பதை காண  எராளமானோர் திரண்டதால் காசிமேடு கடற்கரையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா - 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் ஊர்வலம்



விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நாகையில் நடைபெற்ற 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நீலாதாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தன. அப்போது கரகாட்டம், தப்பாட்டம் மற்றும் கதகளி போன்ற கலைஞர்களின் ஆட்டம் களைகட்டியது. ஆயிரக்கணக்கான மக்கள் ஆடிப்பாடி விநாயகர் சதூர்த்தியை கோலாகலமாக கொண்டாடினர்.



Next Story

மேலும் செய்திகள்