தமிழக பாஜக புதிய தலைவர் யார் ? - 8 நிர்வாகிகள் இடையே கடும் போட்டா போட்டி

தமிழக பாஜக புதிய தலைவர் பதவியை பிடிக்க, நிர்வாகிகள் இடையே கடும் போட்டி உருவாகி உள்ளது.
x
தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளதால், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

தமிழக பாஜக புதிய தலைவர் பட்டியலில், முன்னாள் மத்திய அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன் பெயர் பரிசீலனையில் உள்ளது.

இதுதவிர, பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா -  மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக இளைஞர் அணியின் தேசிய துணைத்தலைவர் ஏ.பி. முருகானந்தம் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. 

இவர்கள் தவிர,  தமிழக பாஜக நிர்வாகிகள் சீனிவாசன்,
வானதி சீனிவாசன் மற்றும் அக்கட்சியின் செய்திதொடர்பாளர் கே.டி. ராகவன் ஆகியோரின் பெயர்களும் தலைவர் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, இவர்கள் 8 பேரில் ஒருவர், தமிழக பாஜக புதிய தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அநேகமாக ஓரிரு நாளில், புதிய தலைவர் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்