கூட்டுறவு சங்க கடன் வழங்குவதில் முறைகேடு? : கூட்டுறவு சங்க துணை தலைவர் வெட்டிக்கொலை
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கும் விவகாரத்தில் துணை தலைவர் வெட்டி கொலை செய்யப்ப்டட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன் கோவிலை அடுத்த தலைவன் கோட்டையை சேர்ந்தவர் திரு நீலபாண்டி. அதிமுக கிளை செயலாளராக இருந்த அவர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் வழங்குவதில் தலைவர் விஜயபாண்டியன் என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை திருநீலபாண்டி தட்டி கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், துணை தலைவர் திருநீலபாண்டியை தலைவரான விஜயபாண்டியன் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு சென்ற புளியங்குடி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தலைமறைவான விஜயபாண்டியனை தேடி வருகின்றனர்.
Next Story