தேனி : ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்
தேனி மாவட்டத்திலுள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் பசுமை பாதுகாப்பு இயக்கம் சார்பில், தேனி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
தேனி மாவட்டத்திலுள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் பசுமை பாதுகாப்பு இயக்கம் சார்பில், தேனி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல் நாளான இன்று 300 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த மரக்கன்றுகள் சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளின் ஓரங்களிலும் நடப்பட்டது. தேனி மாவட்ட பகுதிகளில் ஒரு லட்சம் மரக்கன்று நடப்படும் என்று பசுமை பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, வாரந்தோறும் சனிக்கிழமை அன்று தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளாக சென்று 300 மரக்கன்றுகள் நடப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story