இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத விநாயகர் சிலைகள் : பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு

இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு கோவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத விநாயகர் சிலைகள் : பொதுமக்களிடையே நல்ல  வரவேற்பு
x
கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், சிறிதளவு மண்ணில் பெருமளவு வேதிப் பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் சிலைகளுக்கு மாற்றாக பாரம்பரிய முறையில் சிலைகளை செய்து அதில் ஒரு துளையிட்டு கம்பு, ராகி, சோளம், நெல், பச்சை பயிறு, உளுந்து, கொள்ளு, சாமை, தட்டை பயிறு போன்றவற்றை அடைத்து சிலை தயாரிக்கிறார், இச்சிலைகள் இரண்டே நிமிடத்தில் கரைய கூடியதாகவும், கரையும் போது அந்த தானியங்கள் நீருக்குள் உள்ள உயிரினங்களுக்கு உணவாகவும் கிடைக்கிறது .விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இச்சிலைகளை பலரும் தேடி வந்து வாங்கி செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்