திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கோலாகலம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வந்த ஆவணித் திருவிழா 12 ஆம் நாளான நேற்றுடன் நிறைவு பெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வந்த ஆவணித் திருவிழா 12 ஆம் நாளான நேற்றுடன் நிறைவு பெற்றது. முன்னதாக, சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் வள்ளியம்மன் ஆகியோர் மஞ்சள் நீராடி, 14 செங்குந்தர் மண்டக படியிலிருந்து அலங்காரத்துடன் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். தொடர்ந்து மண்டக படியிலிருந்து சுவாமியும், அம்மனும் மலர்கேடய சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story