மணல் கொள்ளை குறித்து வழக்கு : அவிநாசி தாசில்தார் நேரில் ஆஜராக உத்தரவு

மணல் கொள்ளைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரை தாக்கிய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மணல் கொள்ளை குறித்து வழக்கு : அவிநாசி தாசில்தார் நேரில் ஆஜராக உத்தரவு
x
கோவை மற்றும் திருப்பூரில் ஓடும் கவுசிகா நதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதை எதிர்த்து பிரபாகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், மணல் அள்ள சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில், தொடர்ந்து மணல் எடுத்து வருவதாகக் கூறி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜன், அவினாசி தாசில்தாரர் ரமேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக பிரபாகரன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை வாபஸ் பெறக் கூறி, மணல் மாபியாக்களுடன் தாசில்தாரர் கூட்டு சேர்ந்து தன்னை தாக்கி கொல்ல முயற்சித்ததாகவும், பிரபாகரன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக 21 பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி அதிகாரி பரிந்துரைத்தது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மனுதாரரை கொல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவிநாசி தாசில்தார் ரமேஷ் செப்டம்பர் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்