9 மாவட்டங்களில் அகழாய்வு பணி - தொல்லியல் துறை திட்டம்

வேலூர், திருவண்ணாமலை உட்பட 9 மாவட்டங்களில் அகழாய்வு செய்ய கூடிய இடங்களை கண்டுபிடிக்க களப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் அகழாய்வு பணி - தொல்லியல் துறை திட்டம்
x
தமிழக அரசின் தொல்லியல் துறை, 40 இடங்களில் அகழாய்வு பணிகளை ஏற்கனவே மேற்கொண்டு பல்வேறு வரலாற்று ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.  நடப்பாண்டில் கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மேலும், வேலூர், திருவண்ணாமலை உட்பட 9 மாவட்டங்களில் அகழாய்வு பணிகளை விரிவுபடுத்துவதற்கு தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ,ஈரோடு, விழுப்புரம், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள சரியான இடங்களை கண்டறிவதற்காக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றங்கரையின் நாகரீகத்தை வெளிக்கொண்டு வருவதற்காக, ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள தொன்மை குறித்து அறிவதற்காக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளவும் தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்