மனித செல்லில் சக்தி - கொழுப்பு சேமிப்பு குறைபாடு : குறைந்த செலவில் மருந்து கண்டுபிடிக்க திட்டம்
மனித செல்லில் சக்தி மற்றும் கொழுப்பு சேமிப்பு குறைபாட்டுக்கு, குறைந்த செலவிலான மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக, ஆயுர்வேதா, ஹோமியோபதி, அலோபதி மற்றும் ஆயுஷ் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மனித செல்லில் சக்தி மற்றும் கொழுப்பு சேமிப்பு குறைபாட்டுக்கு, குறைந்த செலவிலான மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக, ஆயுர்வேதா, ஹோமியோபதி, அலோபதி மற்றும் ஆயுஷ் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த குறைபாட்டுக்கு சிகிச்சை பெற அதிக செலவு ஏற்படுவதால் போதிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க, தமிழக சுகாதாரத் துறைக்கு உத்தரவிட கோரி டில்லியை சேர்ந்த லைசோமால் ஸ்டோரேஜ் டிஸார்டரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு சங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த நோய்க்கான மருந்துகளுக்கு மாதம் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும், தமிழகம் முழுவதும் 132 நோயாளிகள் உள்ளதால், ஒரு மாதத்திற்கு 66 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 700 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்க வேண்டி வரும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Next Story