பேராசிரியர் கையெழுத்து போட மறுப்பு என தகவல் : தற்கொலைக்கு முயன்ற ஆராய்ச்சி மாணவி
பேராசிரியர் கையெழுத்து போட மறுத்ததால், ஆராய்ச்சி படிப்பு பயின்று வந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ஆலமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா என்பவர் ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். ஆராய்ச்சி முடித்த கவுசல்யாவின் பாட நோட்டில் பேராசிரியர் ஒருவர் கையெழுத்து மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுசல்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மாணவி தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story