மருத்துவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த விவகாரம் - மனைவியுடன் ஏற்பட்ட மனவருத்தத்தால் தற்கொலை என தகவல்

நாமக்கல் அருகே மருத்துவர் ஆனந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
மருத்துவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த விவகாரம் - மனைவியுடன் ஏற்பட்ட மனவருத்தத்தால் தற்கொலை என தகவல்
x
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளரும், மருத்துவருமான ஆனந்த், நேற்று முன்தினம் தன் வீட்டு தோட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சில தகவல்கள் தெரிய வந்துள்ளது. இவர் நளினி சிதம்பரத்தின் உறவினர் என்பதால் அவருக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் ஆனந்த், நோயாளிகளிடம் அன்பாக பழக கூடியவர் என்றும், ஹெச்ஐவி மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக துப்பாக்கி வேலை செய்கிறதா என ஆனந்த் ஒரு முறை வெடித்து பார்த்ததாகவும், லைசென்ஸ் உள்ள துப்பாக்கியை பயன்படுத்திய இவர், திட்டமிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்