"நாகை, வேளாங்கண்ணியில் பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார்" - தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன்

கீழ்திசை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும், நாகை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு திருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.
நாகை, வேளாங்கண்ணியில் பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் - தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன்
x
கீழ்திசை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும்,  நாகை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு திருவிழா  நாளை மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த விழாவுக்கு வரும்  தங்குவதற்கு கூடுதலான விடுதிகள் மற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளதுடன், குடிநீர், மருத்துவம், இலவச உணவுகள் வழங்க கடற்கரை, பூங்கா, மாதா கோவில் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் ஏற்படுத்தப்பட் டு உள்ளதாக பேராலய பங்கு தந்தை சூசைமாணிக்கம் தெரிவித்துள்ளார். இதனிடையே தீவிரவாத அச்சுறுத்தலைக் கண்டு பக்தர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேளாங்கண்ணி மற்றும் நாகப்பட்டினத்தை சுற்றி இரண்டாயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளதாக தஞ்சை சரக டி.ஐ.ஜி. லேகநாதன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்