தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: "வழக்கு தீவிரமாக விசாரிக்கப்படுகிறது" - சிபிஐ அறிக்கை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் நிலை குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, சிபிஐ க்கும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கும், நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2018 ஆகஸ்ட் 14ல் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, துப்பாக்கி சூடு சம்பவம், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாக இரண்டு வழக்குகள் பதிவு செய்து, தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில காவல்துறையிடம் இருந்து 207 வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை, அரசு மருத்துவமனைகள், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள்பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிபிஐ, மதுரைக் கிளை உத்தரவின்படி, வரும் செப்டம்பர் 16ம் தேதி, விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.
Next Story