அடிக்கடி மலைப் பாதையில் உலவும் யானைகள் : படம் பிடிக்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை

யானைகளை புகைப்படம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அடிக்கடி மலைப் பாதையில் உலவும் யானைகள் : படம் பிடிக்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை
x
யானைகளை புகைப்படம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நீலகிரி அருகே கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில், குட்டியுடன் யானைகள் சுற்றி வருகின்றன. அவற்றை கண்டு உற்சாகமடையும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள், யானைகளை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். செல்போன் மற்றும் கேமராக்களின் பிளாஷ் வெளிச்சத்தால், யானைகள் தாக்கும் அபாயம் இருப்பதாக கூறும் வனத்துறை  அதிகாரிகள், யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என கோரியுள்ளனர். மீறி புகைப்படம் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்