அரக்கோணத்தில் குறிப்பிட்ட ரயில்கள் நிற்க கோரிக்கை : நகரி- திண்டிவனம் மார்க்க பணிகளை விரைந்து முடிக்க மனு
அரக்கோணம் தொகுதியில் ரயில்வே வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்குமாறு ஜெகத்ரட்சகன் எம்.பியும், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. காந்தியும், தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தனர்.
அரக்கோணம் தொகுதியில் ரயில்வே வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்குமாறு ஜெகத்ரட்சகன் எம்.பியும், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. காந்தியும், தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில், அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் மின்சார ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், பெங்களூரு, சீரடி மற்றும் பழனியில் இருந்து வரும் ரயில் அரக்கோணத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். நகரி- திண்டிவனம் ரயில்வே பணியை உடனடியாக முடிக்குமாறும் மனுவில் வலியுறுத்தியதாக கூறினர். கோரிக்கைகளை நிறைவேற்றி தர, உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
Next Story