மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி - 5 பேர் காயம்... போலீசார் விசாரணை
செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் மானாமதி கிராமத்தில், இன்று மாலை திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது.
செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் மானாமதி கிராமத்தில், இன்று மாலை திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது. குழந்தைகள் விளையாடும் பகுதியில் இருந்த பைக்குள் மர்ம பொருள் வைக்கப்பட்டிருந்தது. அது திடீரென வெடித்ததில் ஜெயராம், திலிபன், யுவராஜ், சூரியா, திருமால், விஸ்வநாதன் ஆகிய 6 இளைஞர்கள் சிக்கி படுகாயம் அடைந்தனர். உடனே, அவர்கள் அனைவரும் ஆம்புலன்சில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூர்யா என்ற இளைஞர் உயிரிழந்தார். மற்ற 5 பேரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளவர்களை நேரில் சென்று பார்த்தார். மேலும், மர்ம பொருள் வெடித்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Next Story