முதலமைச்சர் வெளிநாடு செல்லும் போது பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்கத் தேவையில்லை - ஆர்.பி.உதயகுமார்
முதலமைச்சர் வெளிநாடு செல்லும் போது பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்க வேண்டிய தேவையில்லை என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளிநாடு செல்லும் போது பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்க வேண்டிய தேவையில்லை என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.மதுரை உலக தமிழ் சங்கத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 7 நாட்கள் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற 278 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் சாலை என்ற செயலியை அமைச்சர் உதயகுமார் வெளியிட, மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய அமைச்சர், குடிமராமத்து பணிகளில் எந்த தவறும் நடக்கவில்லை என்றார்.
Next Story