முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? - ஸ்டாலின் கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி மத்திய அரசு செயல்படவில்லை என்று என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
x
சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் திமுக எம்.பி.கள்    தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், திமுக கொள்கையில் இருந்து என்றைக்கும் பின்வாங்காது என்று கூறினார். முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் தேவைதானா என்று கூறிய ஸ்டாலின், அதனால் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் பயன் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். ஜம்மு-காஷ்மீர் மக்களின் கருதுக்களை கேட்காமல், அங்கு 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், அது சர்வாதிகாரத்தோடு நடந்திருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்