பெண் பாதுகாப்பு சட்டங்கள் துஷ்பிரயோகம் - நீதிமன்றம் கருத்து

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், அப்பாவி ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.
பெண் பாதுகாப்பு சட்டங்கள் துஷ்பிரயோகம் - நீதிமன்றம் கருத்து
x
மாணவிகள் அளித்த பாலியல் புகார் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து, சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், பேராசிரியருக்கு  எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், கிறிஸ்தவ நிறுவனங்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர் கருதுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

அதேபோல பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை, அப்பாவி ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருந்தார்.

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு எதிராக கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் முறையீட்டை ஏற்று, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பற்றிய கருத்துக்களை நீதிபதி வைத்தியநாதன் திரும்ப பெற்றார்.

அதேபோல பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வதாக கூறிய கருத்தையும் நீக்க மூத்த வழக்கறிஞர்கள் முறையிட்டதை ஏற்று, அந்த கருத்துக்களையும் நீக்கி நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்