அன்னிய செலாவணி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தம்மிடம் கேட்கப்பட்ட தொடர்பில்லாத கேள்விகளை ரத்து செய்ய வேண்டும் என, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அன்னிய செலாவணி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்
x
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தம்மிடம் கேட்கப்பட்ட தொடர்பில்லாத கேள்விகளை ரத்து செய்ய வேண்டும் என, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஜெ ஜெ டிவியின் நிர்வாக இயக்குனர் என பாஸ்கரன் என, குறிப்பிட்டுள்ள போதும், தம்மிடம், அன்றாட விவகாரம் தொடர்பான கேள்விகளை கேட்டதாகவும், இதனை, மாஜிஸ்திரேட் நிராகரித்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சசிகலா மனுவுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, கேள்விகளை திருத்த மாஜிஸ்திரேட்டுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், இயக்குனர் குழுவில் இடம் பெற்றுள்ள சசிகலாவுக்கு, ஜெ.ஜெ. டிவியின் அன்றாட நடவடிக்கை குறித்து தெரியும் எனவும் கூறியுள்ளது. அமலாக்கத்துறையின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க சசிகலா தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை வரும் செப்டம்பர் 3ம்  தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்