மத உணர்வை தூண்டும் வகையில் பேச்சு : ஆண்டாள் கோயில் ஜீயருக்கு சம்மன்
மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி ஆண்டாள் கோயில் ஜீயருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி ஆண்டாள் கோயில் ஜீயருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த சையது அலி என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஆன்லைன் மூலம் அளித்த புகாரின் பேரில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது என சர்ச்சைக்குரிய வகையில் ஜீயர் சடகோப ராமானுஜர் பேசியது குறிப்பிடத்தக்கது.
Next Story