கமுதி அருகே சீறிப் பாய்ந்த மாட்டு வண்டிகள் - சிலிர்த்து ரசித்த மக்கள்

கமுதி அடுத்த கே.வேப்பம்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் களைகட்டியது.
கமுதி அருகே சீறிப் பாய்ந்த மாட்டு வண்டிகள் - சிலிர்த்து ரசித்த மக்கள்
x
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த கே.வேப்பம்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் களைகட்டியது. பெரியமாடு, சின்னமாடு வண்டிகள் என இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. கமுதி சாலையில்,12 கிலோ மீட்டர் தூர பந்தயத்தில், 16 வண்டிகள் பங்கேற்றன. ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில்  இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்த போட்டியில், தொடக்கம் முதலே ஒன்றை ஒன்று முந்தி வண்டிகள் வேகம் காட்டின. வெற்றி பெற்றவர்களுக்கு பணம், அண்டா, குத்துவிளக்கு போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்