ஒசூர் அருகே இரவு நேரத்தில் சாலையை வழிமறித்த காட்டு யானைகள் - நீண்ட போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு
சாலிவரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் 3 காட்டு யானைகள் சாலையை வழிமறித்து நின்றதால் அந்த வழியாக சென்ற பொதுக்கள் அவதிடைந்தனர்.
ஒசூர் அருகே நேற்று இரவில் சாலிவரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் 3 காட்டு யானைகள், சாலையை வழிமறித்து நின்றதால் அந்த வழியாக சென்ற பொதுக்கள் அவதிடைந்தனர். ஒசூர் அருகேயுள்ள தேன்கனிகோட்டை வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த 3 காட்டு யானைகள் நேற்று இரவு சாலிவரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் யானைகள் காட்டிற்குள் விரட்டியடித்தனர்.
Next Story