ராம்ராஜ் காட்டனின் 98வது கிளை திறப்பு விழா
நெல்லை வண்ணார்பேட்டையில் ராம்ராஜ் காட்டனின் 98வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.
நெல்லை வண்ணார்பேட்டையில் ராம்ராஜ் காட்டனின் 98வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. தென் மாநிலம் முழுவதும் ஆடைகளை உற்பத்தி செய்து சாதனை படைத்து வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்திற்கு, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கிளை உள்ளது. இந்நிலையில் இதன் 98வது கிளை நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே திறக்கப்பட்டது. சுதர்சன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சிவராமகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கை ஏற்றி திறந்து வைக்க, செய்யது குழுமத்தின் இயக்குனர் சையது நவாஸ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். தொடர்ந்து, புரொஃபஷனல் கொரியர் நெல்லை உரிமையாளர் மேகலிங்கம் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.
Next Story