பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு : கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு 2,000 கன அடியாக உயர்வு
பவானிசாகர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 24 புள்ளி 6 டிஎம்சி ஆகவும், நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 58 கன அடியாகவும் நீர்மட்டம் 94 புள்ளி 5 இரண்டு அடியாகவும் உள்ளது.
பவானிசாகர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 24 புள்ளி 6 டிஎம்சி ஆகவும், நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 58 கன அடியாகவும் நீர்மட்டம் 94 புள்ளி 5 இரண்டு அடியாகவும் உள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் நேற்றைய தினம் ஆயிரத்து 800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் அணையில் இருந்து பவானி ஆற்றில் ஆயிரத்து 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் நீர்திறப்பு நாளை 2 ஆயிரத்து 300 கனஅடி வரை அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story