ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்பு: "ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை ரத்து"- உயர்நீதிமன்றம்

ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்புக்கு, நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்பு: ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை ரத்து- உயர்நீதிமன்றம்
x
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியைச் சேர்ந்த கே. செல்லம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சிப்காட், காற்றாலை, ரயில்பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு என இதுவரை 1500 ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் கையகப் படுத்தப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் எரிவாயு குழாய் பதிக்க பெறப்பட்ட அனுமதியில் ராமநாதபுரம் - தூத்துக்குடி இல்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். தனிநபர் லாபத்துக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த திட்டததில் ஈடுபட்டிருப்பதாகவும், 700 கோடி ரூபாய் மதிப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்யக் கோரினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அமர்வு, நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்