வணிக வரி - பதிவுத்துறைக்கு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
திருக்கோவிலூரில் 90 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ள வணிகவரி அலுவலக கட்டிடத்தை அத்துறையின் அமைச்சர் கே.சி. வீரமணி முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
வணிக வரி கட்டிடம், பட்டா மாறுதலுக்கான கணினி மூலம் மாற்றம் செய்யும் ஸ்டார் டூ பாயின்ட் ஓ என்ற மென்பொருள் விரிவாக்கம், அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருக்கோவிலூரில் 90 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ள வணிகவரி அலுவலக கட்டிடத்தை அத்துறையின் அமைச்சர் கே.சி. வீரமணி முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூரில் 90 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ள சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் உள்பட ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வரி மற்றும் பதிவுத்துறை அலுவலக கட்டிடங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
Next Story