அத்திவரதர் உற்சவத்தின் 46-வது நாள் - சிறப்பு தரிசனம் 2 மணியுடன் நிறைவு

காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் மற்றும் நன்கொடையாளர் சிறப்பு தரிசனம் இன்று பகல் 2 மணியுடன் நிறைவடைந்தது.
அத்திவரதர் உற்சவத்தின் 46-வது நாள் - சிறப்பு தரிசனம் 2 மணியுடன் நிறைவு
x
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 46-வது நாளில், பெருமாள் வெண்பட்டு அங்கவஸ்திரம், மலர் கவசம், கீரிடம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விடுமுறை நாளான இன்று , வழக்கம் போல் காலை 5 மணிக்கு அத்திவரதர் தரிசனம் தொடங்கியது. அத்திவரதர் உற்சவம் நாளையுடன் நிறைவு பெறுவதால், காஞ்சிபுரத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.இதனிடையே, ஆடி கருடசேவையையொட்டி நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்குள் சென்ற பக்தர்கள் இன்று மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் மற்றும் நன்கொடையாளர் அட்டை சிறப்பு தரிசனம்  இன்று பகல் 2 மணியுடன் நிறைவடைந்தது.

Next Story

மேலும் செய்திகள்