அதிகமான நீர்வரத்தால் பலத்த சேதத்தை சந்தித்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் - அடிப்படை வசதிகளை விரைந்து சீரமைக்க கோரிக்கை

அதிகமான நீர்வரத்தால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அதிகமான நீர்வரத்தால் பலத்த சேதத்தை சந்தித்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் - அடிப்படை வசதிகளை விரைந்து சீரமைக்க கோரிக்கை
x
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 3 லட்சம் கனஅடிவரை அதிகபட்சமாக காவிரியில் நீர்வரத்து  இருந்தது. இதனால் ஒகேனக்கல்லில்  உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகளும், பரிசல் துறை மற்றும்  நடைபாதையும் முற்றிலும் நீரில் மூழ்கியது. நேற்று  காலை முதல் படிப்படியாக காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், தற்போது நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதை வெளியே தெரிகிறது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள் மற்றும் பொருட்களால் நடைபாதையின் இருபுறமும் பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்டு இருந்து ஸ்டீல் வேலிகள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.  பெண்களுக்கான குளியல் அறைகளின் பாதுகாப்பு சுவர் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. இதுதவிர மின்கம்பங்கள், ஒலிபெருக்கி கம்பங்கள். கண்காணிப்பு கேமராக்கள், நடைபாதைகள்  என பல லட்சம் மதிப்புள்ள பொருட்களும்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து  அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  நீர்வரத்து குறைந்தாலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்குவது கேள்விக் குறியாகியுள்ளது. ஒகேனக்கல்லில் சேதமடைந்த  பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்